இலங்கை

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 19.42% சதவீத அதிகரிப்பாகும்.

மேலும் 2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாகும். குறிப்பாக அந்த மாதத்தில் வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…