இலங்கை

சபாத் மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

நாட்டில் வசிக்கும் இஸ்ரேலிய பிரஜைகள் தங்கள் மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், உணவு மற்றும் பானங்களைப் பெறவும் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பொலிஸார் தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பல பொலிஸ் பிரிவுகளில் நிறுவப்பட்ட சபாத் மையங்களுக்கு நிலவும் அச்சுறுத்தலுக்கு அமைய 24 மணி நேர பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வசிக்கும் எந்தவொரு வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், இலங்கை பொலிஸ் அதை மதிப்பிட்டு தேவையான பாதுகாப்பை வழங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…