வணிகம்

தேயிலை பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கல்வி சாதனையாளர்களுக்கு செரண்டிப் அதி சக்தி பல்கலைக்கழக உதவித்தொகை திட்டம் வெகுமதி அளிக்கிறது

2022/2023/2024ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்விச் சிறப்பை வெளிப்படுத்திய தேயிலைப் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்து மாணவர்கள் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தினால் வழங்கப்படும் பெருமைக்குரிய ‘அதி சக்தி பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டத்தின்’ கீழ் பாராட்டப்பட்டனர்.

தரமான தயாரிப்புக்களின் ஊடாக நாட்டை ஊட்டமளிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ள இலங்கையின் முன்னணி கோதுமை ஆலை நிறுவனமே செரண்டிப் கோதுமை ஆலை நிறுவனமாகும். அர்த்தமுள்ள சமூக ஈடுபாட்டு முயற்சிகளின் ஒன்றாக கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புலமைப்பரிசில் திட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

நமுனுகுல பெருந்தோட்டம், பலாங்கொட பெருந்தோட்டம், கெலனி வலி பெருந்தோட்டம் உள்ளிட்ட பரந்துபட்ட பிரதான பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. கல்வியில் திறமையைக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள் முகாமைத்துவம், பௌதீக விஞ்ஞானம், கலை மற்றம் சமாதானக் கற்கைகள் போன்ற பரந்துபட்ட துறைகளின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம், களனி மற்றும் சபரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டக்கல்வியைப் பெறவுள்ளனர்.

ஸ்ப்ரிங் வெலி பெருந்தோட்டத்திலிருந்து சத்தியவேலு ரேஜினி என்ற தனது கல்விச் சிறப்பை வெளிப்படுத்தி மாவட்டத்தில் 46வது இடத்தைப் பெற்று களனி பல்கலைக்கழகத்திற்கு சமாதானம் மற்றும் முரண்பாட்டுத் தீர்வுகள் பற்றிய கல்வியைத் தொடரவுள்ளார். அத்துடன் ஹல்கொல்ல பெருந்தோட்டத்திலிருந்து மாவட்ட ரீதியில் 92வது இடத்தைப் பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரன் அசோஜ் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக் கல்வியைத் தொடரவுள்ளார்.

பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து விரிவான தெரிவு நடைமுறையின் கீழ் இந்தத் திறமையான நபர்களை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தெரிவுசெய்தது. ‘அதி சக்தி செறிவூட்டப்பட்ட கோதுமை மா’ திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட சமூகங்களை வலுவூட்டும் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு இந்த முயற்சி உறுதுணையளிப்பதாக அமைகின்றது.

பெருந்தோட்ட சமூகங்களின் மத்தியில் ஈர்க்கக்கூடிய கல்வித் திறனுக்கான முக்கியத்துவம் இருப்பதை இந்தத் திட்டம் பறைசாற்றுகின்றது. ஒவ்வொரு உதவித்தொகையும் பல்கலைக்கழக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அமைவதுடன், இதனால் மாணவர்கள் அடைய முடியாத உயர்கல்விக் கனவு நனவாகின்றது.

தேயிலைப் பெருந்தோட்ட சமூகங்களில் பயன்படுத்தப்படாத திறன்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதில் நிறுவனம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இத்திட்டம் எடுத்துக்காட்டுகின்றது. இந்த இளம் கல்வியாளர்கள் தங்கள் சமூகங்களுக்குள் நேர்மறையான மாற்றத்திற்கான ஊக்கியாக மாறுவார்கள் என செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் உறுதியாக நம்புகின்றது.

இலங்கையின் முன்னணி கோதுமை மா ஆலை நிறுவனமான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் வணிக நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை விரிவுபடுத்தி, தோட்ட இளைஞர்களுக்குத் தரமான உயர் கல்வி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை அணுகுவதற்கான பாதைகளை உருவாக்குவதில் ஒத்துழைத்து வருகின்றது.

தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பத்து முன்னோடிகளின் வெற்றி, எண்ணற்ற பிற தேயிலைப் பெருந்தோட்ட சமூக மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என எதிர்பார்ப்பதுடன், அவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்படும்.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…