No products in the cart.
வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் மரணம்
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 59 வயது வைத்தியர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.