இலங்கை

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் விசாரணை!

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் விசாரணை!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் இன்று (19) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் சிறை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…