இலங்கை

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்துடன் சுமார் 3 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் இன்று தீர்க்கப்பட்டதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சில பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்க தங்களது சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 7 கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…