No products in the cart.
கனடாவில் எரிபொருள் விலை உயர்வு
கனடாவின் பல பகுதிகளில் டீசலின் விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் டீசல் விலை கடந்த ஏழு நாட்களில் மட்டும் லீட்டருக்கு 16 சதங்களினால் உயர்ந்துள்ளது.
இது நிலையான வருமானம் கொண்ட மக்கள் மற்றும் வணிக வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் எரிபொருள் விலை உயர்வு | Diesel Gas Prices Continue To Climb In Canada
கனடா முழுவதும் டீசல் விலை உயர்ந்துள்ளதுடன், பெட்ரோல் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, வடக்கு ஒன்டாரியோவில் லீட்டருக்கு 18 சதங்கள் என்ற அளவில் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தில் தேசிய சராசரி விலை 5.7 சதங்கள் உயர்ந்துள்ளது.
















