No products in the cart.
கனடாவில் கரடியை விரட்டிய சிறிய நாய் – வைரலாகு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மிஷன் நகரில் கரடி ஒன்றை சிறு நாயொன்று விரட்டியடித்துள்ளது.
நகரில் வசிக்கும் மாட் பெர்னெட் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் கரடிகள் அடிக்கடி வந்து செல்லுவது சாதாரணமான ஒன்று எனத் தெரிவிக்கின்றார்.
ஆனால் கடந்த சனிக்கிழமை, ஒரு கரடி குப்பைத் தொட்டிக்குள் நுழைய முயன்றபோது, வீட்டின் நான்கு வயதான சிறிய நாய் “லின்கன்” நம்பிக்கையோடு அதனை எதிர்த்தது என தெரிவித்துள்ளார்.
கனடாவில் கரடியை விரட்டிய சிறிய நாய் – வைரலாகும் வீடியோ | Video Shows Brave Little Dog Chasing Bear
லின்கன் என்பது யோர்கி மற்றும் சிஹுவாஹா கலப்பின நாய் என குறிப்பிட்டுள்ளார்.
சிறிய நாய்கள் பெரும்பாலும் மிகவும் கோபமானவை. தங்களை பெரியதாக நினைக்கும் தன்மைகொண்டவை என பெர்னெட் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கரடி குப்பை தொட்டியைக் கழற்ற முயன்றபோது, லின்கன் நேராக கரடியை நோக்கி ஓடிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லின்கன் என்ற குறித்த நாயை கரடியை துரத்தியடித்த்துவிட்டு வீடு திரும்பியதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டதும், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பார்வயைிட்டுள்ளனர்.
பலரும் இந்த சிறிய நாய் மிகவும் தைரியமாக கரடியை எதிர்த்ததைக் காண மகிழ்ந்தனர். சிலர் எதிர்மறையான கருத்துக்களும் தெரிவித்தனர் என பெர்னெட் கூறியுள்ளார்.