உலகம்

ட்ரம்பின் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களியுங்கள் – ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த ‘பிக் பியூட்டிபுல்’ வரிக்குறைப்பு சட்டமூலத்துக்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கியது. இந்த சட்டமூலத்துக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் சட்டமூலத்தை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டமூலத்தை விமர்சித்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இந்த சட்டமூலத்தை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…