கனடா

கனடா மீது மேலும் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் இருநாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடுவே அவர் இந்த திடீர் அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, கனடிய பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடா மீது மேலும் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை | Trump 35 Per Cent Tariffs

இந்த கடிதத்தை டிரம்ப் தனது Truth Social சமூக ஊடக பக்கத்தில் இரவில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நாடு அல்லது உங்கள் நாட்டுக்குள் உள்ள நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அமெரிக்காவில் உற்பத்தி செய்யத் தீர்மானித்தால் எந்தவிதமான வரியும் விதிக்கப்படமாட்டாது,” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப், இந்த 35% வரிவிதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், கனடா பதிலடி எடுத்தால் இது மேலும் உயர்த்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

கார்னியின் அலுவலகம், அவர் இந்த கடிதத்தை பெற்றுள்ளார் என உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கனடிய தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக , கார்னி தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…