No products in the cart.
அமெரிக்காவில் காணாமல்போன கனேடிய சிறுமி: பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
அமெரிக்காவின் நியூயார்க்கில் மாயமான ஒரு சிறுமி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் காணாமல்போன கனேடிய சிறுமி: பொலிசார் தெரிவித்துள்ள தகவல் | Canadia Child Missed In Us Found As Death
சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், நியூயார்க்கிலுள்ள Lake George என்னுமிடத்தில் வாழும் கனேடியரான லூசியானோ (Luciano Frattolin, 45), தனது மகளான மெலினா (Melina Frattolin, 9)ஐக் காணவில்லை என பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
அவள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், Ticonderoga என்னுமிடத்தில், மெலினாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மெலினாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.