இலங்கை

திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகையிட்டு தீயிட்டு அழிப்பு!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டடிருந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமை இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், குறித்த பகுதியில் மிகவும் நுட்பமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாகவும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறப்பட்டு நீர் பாய்ச்சி இந்த கஞ்சா தோட்டம் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…