இலங்கை

இனம் தெரியாதவர்களால் இளைஞன் மீது வாள் வெட்டு

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இன்று இடம்பெற்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நபரொருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவரை கீழே தள்ளி விழுத்தி விட்டு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் மேற் மேற்கொண்ட பின்னர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காக படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து வீதியில் விழுந்து கிடந்த நபரை வீதியில் வீதியால் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…