இலங்கை

எல்லைத் தாண்டிய மேலும் 4 இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டனர். 

அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…