இலங்கை

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் நேற்று இரவு (10) பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரைன் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனமும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…