இலங்கை

அமைச்சுக்களின் பணியாளர்களுக்கும் AI குறித்து தெளிவுபடுத்தல் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்பாடுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை ஆகஸ்ட் 15, 16 மற்றும் 23ஆம் திகதிகளில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. 

‘AI For Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டறையில், ஜனாதிபதி செயலகத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன், அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமான, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப முன்னெடுப்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டல் மற்றும் அவர்களை தயார்படுத்துதல் , பொது சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த முன்னேற்றகரமான அணுகுமுறையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 

முதலாவது நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் பணியாளர் அதிகாரிகளுக்கும், இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் கல்வி அமைச்சின் பணியாளர் அதிகாரிகளுக்கும், மூன்றாவது நிகழ்ச்சித்திட்டம் நிதி அமைச்சின் பணியாளர் அதிகாரிகளுக்கும் அண்மையில் நடைபெற்றது. 

ஏனைய அனைத்து அமைச்சுக்களின் பணியாளர் அதிகாரிகளை உள்ளடக்கியதாக அடுத்துவரும் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக பணிப்பாளர் சஞ்சய கருணாசேன, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிஸ அபேசிங்க ஆகியோர் நடைமுறை செயற்பாடுகளுடன் கூடியதான தெளிவூட்டல்களை வழங்கவுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…