உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…