விளையாட்டு

மிட்சல் ஸ்டார்க் T-20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. 

அதனையும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியினை கருத்திற் கொண்டும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மிட்சல் ஸ்டார்க் குறிப்பிட்டுள்ளார். 

35 வயதான ஸ்டார்க், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கும் அவர் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…