இலங்கை

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய அணியின் முன்னணி வீரர் ஓய்வு!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (வயது 42) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

இவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன இவர் திறமையான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டார். 

42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். 

அதன்பின் அஸ்வின், ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களின் வருகையால் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். 

இந்த சூழலில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அமித் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 03 வீடுகள் சேதமைந்துள்ளன. ஒரு…