No products in the cart.
ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல ஆன்லைன் சூதாட்ட செயலியை சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்திய குறிப்பிடத்தக்கது.