No products in the cart.
வருமானம் அதிகமாக இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை!
இந்தியாவின் சென்னையை சேர்ந்த வைத்திய தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், வைத்தியர், தன் மனைவிக்கு மாதம் 30,000 ரூபா ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்தியர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனுதாரர் தன் மனைவிக்கு 30,000 ரூபா ஜீவனாம்சம் தர வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது படிப்புக்கான செலவாக 2.77 லட்சம் ரூபாயை தர மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம் அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார் என மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.