இலங்கை

மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) 36 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த போராட்டத்தில் இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும் நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு, அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே, சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…