விளையாட்டு

இந்திய ஏ அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஷ்

அவுஸ்திரேலிய ஏ அணியுடன் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

15 பேர் கொண்ட இந்திய குழாம் தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ள நிலையில், இந்த தொடருக்கு ஸ்ரேயாஷ் ஐயர் தலைமைத் தாங்கவுள்ளார். 

அத்துடன் துருவ் ஜூரல் உப அணித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். 

சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டியும் இந்திய குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கே.எல். ராகுல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் இரண்டாவது போட்டியில் மட்டுமே விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அவர்கள் அணிக்கு திரும்பும் போது எந்த இரண்டு வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்ற தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வௌியிடவில்லை. 

இந்திய ஏ மற்றும் அவுஸ்திரேலிய ஏ அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி செப்டம்பர் 16 ஆம் திகதியும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 23 ஆம் திகதியும் லக்னோவில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாம் பின்வருமாறு, 

Shreyas Iyer (capt), Abhimanyu Easwaran, N Jagadeesan (wk), Sai Sudharsan, Dhruv Jurel (vice-capt, wk), Devdutt Padikkal, Harsh Dubey, Ayush Badoni, Nitish Kumar Reddy, Tanush Kotian, Prasidh Krishna, Gurnoor Brar, Khaleel Ahmed, Manav Suthar, Yash Thakur, KL Rahul*, Mohammed Siraj* 

(*) இரண்டாவது போட்டியில் மாத்திரம் இடம்பெறும் வீரர்கள்

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…