இலங்கை

20 கோடி ரூபா போதைப்பொருள் விமான நிலையத்தில் கண்டுபிடிப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பொதியொன்றிலிருந்து 20 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் நிறை 20.9 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, 53 வயதுடைய சந்தேக நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…