No products in the cart.
செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
சிந்த்பாத் என்று அழைக்கப்படும் படகு, துறைமுகத்திற்கு அருகில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் உள்ள மாஸ்கோ தூதரகத்தின்படி, நீர்மூழ்கிக் கப்பலில் சுமார் 40 பயணிகள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் ரஷ்யர்கள் என்று நம்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.