சினிமா

சக்தி திருமகன் படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அருவி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் அருண் பிரபு. முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து வாழ் எனும் படத்தை இயக்கினார்.

இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது.  படம் அளவிற்கு இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்துள்ளது சக்தி திருமகன்.

இப்படத்தில் இசையமைப்பாளரும், பிரபல நடிகருமான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சுனில் கிற்பலனி, வாகை சந்திரசேகர், திருப்பதி ரவிந்த்ரா ஆகியோர் நடித்திருந்தனர். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், முதல் நாள் இப்படம் உலகளவில் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சக்தி திருமகன் படம் முதல் நாள் உலகளவில் ரூ. 80+ கோடி வசூல் செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…