இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கைது!

கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…