No products in the cart.
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார்.
ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா நடத்திய ஒரு நாள் உச்சி மாநாட்டில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, கனடா மற்றம் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தை தொடர்ந்து பிரான்ஸும் தற்போது அறிவித்துள்ளது.
பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, அன்டோரா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்க உள்ளன.
பலஸ்தீனத்தை தனிநாடாக 140 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. எவ்வாறாயினும் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
உலக நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
காசாவில் விரிவடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் குடியேற்றக் கட்டுமானம் தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.