No products in the cart.
நாணய கொள்கையில் மாற்றம் இல்லை
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (23) நடைபெற்ற நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளை கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தற்போதைய நாணய கொள்கை நிலைப்பாடானது பணவீக்கத்தை பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.