விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய (23) இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…