No products in the cart.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.