இலங்கை

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் நாளை (31) அழைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான தகவல்களை முன்னாள் அமைச்சர் அறிந்திருப்பாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…