விளையாட்டு

துனித் வெல்லாலகேவுக்கு ஆறுதல் கூறிய சூர்யகுமார்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவுக்கு, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் கூறிய வீடியோ அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே அண்மையில் காலமானார். 

நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்தவுடன் அணி நிர்வாகத்தினால் துனித்தின் தந்தை மரணித்த செய்தி அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கொழும்புக்கு திரும்பினார். 

பின்னர் மறுநாளே மீண்டும் ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய இந்திய அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததன் பின்னர் துனித்தை சந்தித்த சூர்யகுமார் யாதவ், துனித்தின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். 

அத்துடன் துனித் வெல்லாலகேவின் தோளிலில் தட்டி அவருக்கு ஆறுதல் கூறும் காட்சி அனைவரையும் நெகிழ வைக்கின்றது.

What's your reaction?

Related Posts

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி…