இலங்கை

ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் வைத்தியசாலையில் அனுமதி!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘பொடி மெனிகே’ தொடருந்தின் இயந்திரத்தில் மோதியதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் இன்று 28 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவைக்கு அருகில் இன்று பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தொடருந்து மோதியதில் இயந்திரத்தின் கீழ் சிக்கிய பெண்ணை விபத்து நடந்த இடத்துக்கு அருகிலுள்ள வாகன பழுதுபார்ப்பு நிலையத்திலிருந்த பணியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவத்தின்போது தொடருந்து மிகவும் மெதுவாக பயணித்து கொண்டிருந்ததாகவும், குறித்த பெண் நீண்ட நேரம் தொடருந்து பாதைக்கு அருகில் இருந்ததாகவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…