இலங்கை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​சந்தேக நபர் இன்று 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 03 வாகனங்களும் மீட்கப்பட்டன. 

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நாளை 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…