No products in the cart.
பேருந்து மோதி பெண் ஒருவர் பலி!
காலி கொழும்பு பிரதான வீதியின் ரத்கம சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
காலியில் இருந்து ஹிக்கடுவ நோக்கி பயணித்த பேருந்து வீதியோரத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண், காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் புஸ்ஸவைச் சேர்ந்த 77 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் காலி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.