No products in the cart.
கனடாவில் சிகரெட் விற்பனையின் பின்னணியில் சட்டவிரோத கும்பல்கள்
கனடாவில் சிகரெட் பிடிப்பவர்கள் வாங்கும் ஒவ்வொரு பாக்கெட்டும் குற்றவாளி கும்பல்களுக்கு உதவக்கூடும் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
மேற்கு கனடாவில் சட்டவிரோத சிகரெட் சந்தை கணிசமான அளவில் வளர்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
சட்டப்படி விற்பனை செய்யப்படும் சிகரெட்கள் மீது அரசு விதிக்கும் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், சிகரெட் பயன்படுத்துவோரை குறைந்த விலையில் விற்கப்படும் சட்டவிரோத சிகரெட் பக்கம் திரும்பவைக்கின்றன.
சட்டப்படி விற்கப்படும் சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை சுமார் 150 டொலர்களாக உள்ள நிலையில், சட்டவிரோத சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை சுமார் 40 டொலர்கள் மட்டுமே.
விடயம் என்னவென்றால், அந்த விலை குறைந்த சிகரெட் பாக்கெட்களின் பின்னணியில் குற்றவாளி கும்பல்கள் உள்ளன.
ஆக, விலை குறைவாக உள்ளது என்பதற்காக சட்டவிரோத சிகரெட் பாக்கெட்களை வாங்குவோர், அந்த குற்றவாளிகளுக்கு நிதியுதவி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி விலை குறைவாக உள்ளது என்பதற்காக மக்கள் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்களை வாங்குவதால் சட்டப்படி சிகரெட் விற்போரின் விற்பனை பாதிக்கப்படுகிறது. ஆகவே, சிலர் தங்கள் கடைகளில் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்களை விற்கத் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இந்த சட்டவிரோத சிகரெட் பாக்கெட்களை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.