No products in the cart.
இரண்டு பில்லியன் டொலருக்கு ஆர்.சி.பி அணி விற்பனையாகின்றது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு பில்லியன் டொலருக்கு அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் இன் முன்னால் தலைவரான லலித் மோடியும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு அணியை வாங்குவதற்கான போட்டியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான அடர் பூனாவாலா முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டே பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
அணியின் வென்றதை கொண்டாடும் விதமாக, பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் சம்பவதும் பதிவாகியிருந்தது.
இந்த துயர சம்பவத்திற்கு பின்னரே, பெங்களூரு அணியை விற்பனை செய்வது குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், பெங்களூரு அணிக்காக சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிக பிரம்மாண்டமான விலையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விற்பனை முடிந்தால் பெங்களூரு அணி, உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு அணிகளில் ஒன்றாக மாறும்.
இந்த விற்பனை பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான சிட்டி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.