No products in the cart.
விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசியதாகவம், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என விஜய் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தொல்.திருமாவளவன் பேசுகையில்,
10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு பொது மக்ள் காத்திருந்தவர்கள்.
அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடராகும்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார். சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் காணொளி உறுதிபடுத்துகிறது.
தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார். தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பாஜக தொடங்கி விட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பாஜகவின் கருவி தான் என்பது உறுதியாவதாக தொல்.திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.