No products in the cart.
பேரரசர் நருஹிதோவை சந்தித்த ஜனாதிபதி
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.
டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.