இலங்கை

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று 30)டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர்  யோஹெய் சசகாவாவை சந்தித்துள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன்போது, இலங்கையில் உள்ள ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதாக தனது உறுதி மொழியை சகாவா வலியுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளை புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் இதன் போது அவர் வெளியிட்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…