No products in the cart.
விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்… புதிய பட அறிவிப்பு
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மிகவும் தரமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக மக்களால் கொண்டாடப்படுபவர் தான் கீர்த்தி சுரேஷ்.
கடந்த வருடம் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்தவர் அதன்பின் பெரிதாக கேமரா பக்கம் காணவில்லை. நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை மட்டும் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தெலுங்கில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ரவுடி ஜனார்த்தன் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். இதில் நாயகியாக நடிக்க வைக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாது என கூற அவருக்கு பதில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.