கனடா

கனடாவிற்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்

 கனடாவிற்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

எறிகணை ரொக்கட் கட்டமைப்பு (M142 High Mobility Artillery Rocket Systems) மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை கனடாவுக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அமெரிக்க 1.75 பில்லியன் டொலர்கள் என அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகவர்

கனடா, இந்த ஒப்பந்தத்தின் கீழ் 26 ரொக்கட் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த விற்பனை அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கனடாவின் இராணுவ திறனை மேம்படுத்துவதன் மூலம், நேட்டோ கூட்டணியில் ஐரோப்பாவில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் வர்த்தக ரீதியான முரண்பாட்டு நிலைமைகள் மற்றும் கனடாவை 51ம் அமெரிக்க மாநிலமாக உள்வாங்குவதாக டிரம்ப் கருத்து வெளியிட்டு வரும் பின்னணியில் இந்த ஆயுதக் கொள்வனவு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…