No products in the cart.
போக்குவரத்துத் துறை சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த ஆலோசனை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால், “போக்குவரத்துத் துறையின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி நேர்மறையான திசையில் வழிநடத்துதல்” தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட உபகுழுவில், வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
கடந்த 26.09.2025 அன்று, உபகுழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சாரதிகள், பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான போக்குவரத்துத் துறை அளவுகோல்களை வகுக்க வேண்டும் என உபகுழு வலியுறுத்தியது.
வாடகை வாகனத் துறையில் ஈடுபட்டவர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவது முக்கியம் எனவும் குழு தெரிவித்தது.
இதன்படி, குறித்த துறையின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை உபகுழுவிடம் முன்வைத்ததுடன், அவற்றை எழுத்து வடிவில் சமர்ப்பிக்கவும் இணங்கினர். இந்தப் பரிந்துரைகள் எதிர்காலத்தில் போக்குவரத்துக் கொள்கைகளை வகுக்கும்போது பரிசீலிக்கப்படும் என உபகுழுத் தலைவர் உறுதியளித்தார்.
மேலும், இயலாமை உள்ளவர்களின் போக்குவரத்துத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன.