இந்தியா

விஜயுடன் டெல்லி பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை; திமுக வயிற்றில் புளி …பரபரப்பில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன.

பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன

திமுக தரப்பு கரூர் வழக்கில் தீவிரமாக விஜய் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் விஜய் , டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அநநத தகவல்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் பாஜகவுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ளதாக கூறப்படுகின்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரத்தில் , திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

அதேவேளை கரூரில் விஜய் பிரச்சாரத்தில் திட்டமிட்டே  திமுக தரப்பு செய்பட்டு உயிர்பலிகளை வாங்கியதாக பாஜக அண்ணாமலை உள்ளிட்ட பலர் பகிரங்கமாக கூறியுள்ள அதேசமயம்   பொது மக்களும் விஜய்க்கு ஆத்ரவாக குரல் எழுப்பி  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…