இலங்கை

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை !

ற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று 31 ஆம் திகதி மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ,

இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்.

இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும். இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவௌிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.

முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…