உலகம்

இங்கிலாந்தில் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற இந்திய தம்பதி!

 இங்கிலாந்தில் இந்திய தம்பதி தங்கள் 3 வயது குழந்தையை பட்டினிபோட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் பென்னைன் வே என்ற இடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களான மன்பிரீத் ஜாதனா (வயது 34) மற்றும் ஜஸ்கிரெத் சிங் உப்பல் (வயது 36) வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய 3 வயது மகளான பெனலோப் சந்திரீ 2023-ம் ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி மாலையில் வீட்டில் உயிரிழந்து உள்ளது.

 தகவல் அறிந்து சென்ற போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டது தெரிய வந்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து கடந்த மாதம் குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.

3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளதுடன் அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது.  

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…