No products in the cart.
ஆபரேசன் சிந்தூர் 2.0 குறித்து ராணுவ தளபதி அப்டேட்!
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று (03) உரையாற்றினார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2 ஆம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
இந்த முறை நாம் ‘ஆபரேஷன் சிந்தூர் 1.0’ போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும் என தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2025 இல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.