உலகம்

திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக பேராயர் ஆன பெண்!

இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார். 

63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106 ஆவது ஆவார். 

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது. 

11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது. 

இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…