சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட மகளிர் இந்திய – பாகிஸ்தான் போட்டி

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி தற்போது ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,போட்டி சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

குறித்த மைதானத்துக்குள் ஒரு வகை பூச்சிகளின் அதிகரித்த தன்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version